வெள்ளி, 14 மே, 2021

கைப்பேசிக் காதல்

                                                                கைப்பேசிக் காதல்



என் நிமிடத்து பயணங்களிலும்

என் நீண்ட தூர பயணங்களிலும் துனையாய் வருகிராய் ..!!

எந்தன் கோபங்களையும் கெஞ்சல்களையும்  கொஞ்சல்களையும் 

உன்னில் சேகரித்து கொண்டாய் ..!!

நீண்ட நாள் நட்புகளை 

ஞாபகப்படுத்திக் கொடுக்கிறாய் ..!!

நீண்ட இரவுகள் கதை பேச வைக்கிறாய் ..!!

பிடித்த பாடல்களை பகிர்ந்து 

கொள்கிறாய் ..!!

என் சந்தோசங்களை உன்னில் பதிந்து 

கொள்கிறாய் ..!!

என் எழுத்துக்களை ஏந்திக் கொள்கிறாய் ..!!

என்னை உன்னில் காணச்செய்கிறாய் ..!!

என் ஞாபகங்களை உன்னில் வைத்துக்கொள்கிறாய் ..!!

விளையாட்டு தோழமையாய் 

நிற்கின்றாய் ..!!

உன்னாலையே காண்கின்றேன் 

இவ்வுலகத்தை ..!!

தன்னால் சிரித்துக்கொள்கிறேன் 

உன்னால் ..!!

உன்னால் மறதியை மன்னிக்க 

கற்றுக்கொண்டேன் ..!!

என்னை களிப்புறவும் செய்கிறாய் ..!!

கவலை கொள்ளவும் செய்கிறாய் ..!!

நீ கை நழுவினால் கதறி அழுகிறது மனம்  ..!!

பிடி தகர்ந்தால்  பதறுகிறது நெஞ்சம் ..!!

நீயின்றி நன் இல்லை ..!!

நன் இல்லையேல் நீயும் இல்லை ..!!

என் கைபேசி காதல் ..!!


                                            தளிர் 🍁🍁


                                                        



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கைப்பேசிக் காதல்

                                                                கைப்பேசிக் காதல் என் நிமிடத்து பயணங்களிலும் என் நீண்ட தூர பயணங்களிலும் துனைய...