மனநிலை
என்னவொரு மாதிரியான மனநிலை இது ?
புத்தகம் புறட்ட பிடிக்கவில்லை !
பயணத்தின் பாதைகளில் மனம் பதியவில்லை !
தொலைக்காட்சிகளில் தொலைந்திட மனமில்லை !
உணவினை உதாசீனப்படுத்திச் செல்கிறேன் !
உறக்கத்திற்கு உயிர் கொடுக்க விருப்பமில்லை !
நட்பிடமும் நயமாகப்பேசி நகர்ந்துவிடுகின்றேன் !
வீட்டின் வாசத்தை வெறுக்கின்றேன் !
இனிய இரவுகளை விழித்தேக் கொள்கின்றேன் !
விழிவழி வரும் நீரை வெளியேற்ற விருப்பமில்லை !
எழுத எண்ணங்களும் எழுத்துக்களும் பிடிபடவில்லை !
பிடித்தவற்றிலிருந்து பிடியை நகர்த்திக்கொள்ள விரும்புகின்றேன் !
நிதர்சனங்களை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை !
மனதின் மறுதல்களையெல்லாம் மறுதலித்தேச் செல்கின்றேன் !
வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் யாவும் ஏற்புடையதாயில்லை !
மங்கை இவளின் மனநிலைதான் என்னவோ ??

தளிர் 🍁🍁

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக