தற்கொலை
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்
அத்துனைக்கும் அழகான சமாளிப்புகள் !
சிறுகச் சிறுக சிதைந்து கொண்டிருக்கிறேன் !
வாழ வழியுமின்றி, வழித்துணையுமின்றி
வருந்திக் கொண்டிருக்கிறேன் !
ஏக்கங்களை ஏந்திக் கொள்ள யாரும் இல்லாத
ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை !
வாழ்வினிதென்று தர்க்கம் செய்ய தயாராகவும் இல்லை
தைரியமும் இல்லை எனக்கு !
வெறுப்பின் உச்சக்கட்டத்தை அடைந்து
வெந்து கொண்டு இருக்கிறேன் !
எதன் மீதும் எப்பற்றும் இல்லாததால்
இவ்வெற்றுடலின் வீணான வாழ்வு
போதுமென்றுணர்கிறேன் !
இப்பாழ் ஜீவிதம் நடத்திய வாழ்க்கை
என்னும் நாடகம் போதுமென்றுணர்கிறேன் !
சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
செத்தொழிய !
தன்னிரக்கம் தன்னை தக்க வைத்துக்
கொண்டதாலே இவ்முடிவு !
ஆறுதல்களுக்கு ஏங்கி உன்னை
அணைத்துக் கொள்கிறேன் !
தற்கொலை
தளிர் 🍁🍂

சிதைந்து ..
பதிலளிநீக்குஏன் இவ்வாறு லாம் எருமை??
பதிலளிநீக்கு