சில்வண்டாய் சிறகடித்து சுதந்திரமாய் சுற்றித்திரிந்த காலம்,
விளையாடவே நேரம் போதாமல் இருந்ததால், பள்ளிப்பாடம் தவிர மற்றவைகளை படிப்பதற்கு மறந்தும் கூட யோசித்தது கிடையாது .
வேலை நிமித்தமாக எங்களது குடும்பம் நகரம் நோக்கி நகர்ந்தது, எங்களது ஊர் நகரத்தின் பிடியிலிருந்து நானூறு மைலகளுக்கு அப்பால் இருந்ததால் நகரத்தின் வாசம் சற்றே மூச்சு முட்டிதான் போனது,
ஊர் புதிதென்பதால் உறவுக்காரபெண் ஒருதியுடன்தான் பள்ளிக்கு பயணம் என்று அனுப்பிவிட்டார்கள். அவள் 10 ஆம் வகுப்பு படித்ததால் தினமும் மாலை அவளுக்கு சிறப்பு வகுப்புகள் இருக்கும். நான் அவளை விட ஒரு அகவை சிறியவள் அதனால் அவளுக்கு கீழ் உள்ள வகுப்பில் இருந்தேன் . அதனால் எனக்கு அந்த வகுப்புகள் கிடையாது, என்னை போலவே இன்னொரு பெண் எனக்கு தோழமையாய் வந்தால். இருவருமாக எவ்வளவு நேரம் தான் பள்ளியை சுற்றி வருவது.
வேறு எதாவது பொழுது போக்க இடம் அமைகிறததா என்று தேடிய பொழுதுதான், அது எங்கள் கண்ணில் தொலைந்தது. அதுதான் நூலகம் எங்கள் பள்ளிக்கு மிக மிக அருகில் இருந்தது, அன்று அது எங்கள் கண்ணில் பட்டதால் தான் இது இன்று எழுதப்படுகிறது,
நூலகத்திற்கு செல்வது அதுவே முதல் முறை, அதிலும் இவ்வளவு பெரிய நூலகம் என்பதிலேயே சற்று அதில் சொக்கிபோனேன்,
நாங்கள் சிறுவயது பள்ளி சிறுமிகள் என்பதால், வீட்டிற்கு புத்தகம் எடுத்து செல்ல அனுமதியில்லை, அதனால் அங்கேயே படித்துவிட்டு சென்று விடுவோம், இதுவே வழக்வழக்கமுமாயிற்று.
அதிலும் சிறு பிரச்சினை மேலெழும்பியது! எந்த புத்தகம் படிப்பதென்று. அதனால் எங்களது பஞ்சாயத்துக்கு" திருவள்ளுவரையே" நடுவராக்கிக் கொண்டு அவரையே படிப்பதாக முடிவு செய்து படித்தும் முடித்தாகி விட்டது.
அடுத்ததாக எங்கள் போட்டிகுள் போர்க்களம் புகுந்தவர் காந்தியடிகள், அடுத்ததாக படித்தது காந்தியடிகளின் "சத்திய சோதனை" அப்பொழுது அதில் என்ன புரிந்து கொண்டேன் என்பதை புரிந்து கொள்ள மற்றுமொருமுறை படிக்கவேண்டுயதாகி போயிற்று.
த்ரோவ் பால் லில் சேர்ந்ததால் படிப்பதை பா தியில் விட்டுவிட்டு செல்லவேண்டியதாகிவிட்டது. பின்பு இராமாயணமும் , மஹாபாரதமும் படித்து முடிக்க ஒருவருட காலம் ஆனது. இடையிடையே "சுஜாதாவையும் " தொட்டுவிட்டு சென்றேன்.
நான் அடுத்த அகவையில் அடியெடுத்து வைத்ததால் அடுத்த வகுப்பிற்கு சென்று விட்டேன் 10 ஆம் வகுப்பை படித்து கடக்க வேண்டியதால், த்ரோவ் பால் லோடு சேர்த்து நூலக படிப்பையும் தூக்கியெறிந்துவிட்டு பாட படிப்பை கவனிக்க சென்று விட்டேன்
பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை, பாட படிப்பே பாவத்திற்குள்ளானதால் நூலக படிப்பு நினைவிலிருந்தே நீங்கி கொண்டது!!!
கல்லூரியில் காலடி எடுத்து வைத்த காலம், பொறியியல் கல்லூரி என்றாலே ஊருக்கு ஒதுக்குப்புறம்தான் என்று எழுதாத விதியாகிவிட்டதால், நான் படித்த கல்லூரியும் அப்படியொரு பட்டியலில் சேர்ந்து விட்டது... என் வீட்டிற்கும் கல்லூரிக்கும் 1 1/2 மணி நேர பயணம் பிடிக்கும்...
யாருக்குத்தான் பிடிக்காது நெடுந்தூர பயணமும், நெருங்கிய துணையும் .
அதீத கற்பனை வேண்டாம் இங்கு என் துணை என் கைபேசி மட்டுமே!!
கல்கியும், ஜெயகாந்தனும், ஜெயமோகனும், சுஜாதாவும், இன்னும் பல எண்ணிலடங்கா எழுத்தாளர்கள் அத்துமீறி ஆட்சி புரிந்தார்கள் என் கைபேசியை
சுஜாதா!!!!, என் 1 1/2 மணி நேர பேருந்து பயணங்களின் பொழுது , என் பக்கத்து இருக்கை பயணியாகி போனார் , சுஜாதாவின் சிறுகதைகளை சிந்தாமல் சிதறாமல் சேமித்து வைத்துள்ளேன் என்னுள். புத்தகத்தில் புதைந்து போனதால் நிறுத்தம் தவறி இறங்கியதெல்லாம் உண்டு அவருடைய அறிவியல் கதைகளில் அவ்வளவு ஒரு ஈடுபாடு.... அசாத்தியமான சிந்தனைகள் , அட்டகாசமான கற்பனைகள்,,,, எப்படி இவரால் சிந்திக்கமுடிகிறது என்று நான் சிந்தித்து கொள்வேன்.....
ஜெயகாந்தன் மற்றும் புதுமை பித்தன் இருவரும், என் மனதினில் ஓய்யாரமாய் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டார்கள்
அடுத்ததாக "கல்கி " , என் காதலன் . வரலாற்றில் வாழக்கற்றுக்கொடுத்ததே , என் காதலன் கல்கி தான் . பொன்னியின் செல்வனை இரு முறை பார்த்தாகிவிட்டது , ஆனாலும் ஆதித்தகரிக்கலன் மரணம் பற்றி அறியும் ஆவல் அடங்கவில்லை , அதனாலேயே "சங்கதாராவையே " சளைக்காமல் படித்தாகிவிட்டது. " சிவகாமியின் சபதத்தை " படிக்கச் வேண்டு மென்று சபதம் எடுத்து பயணித்து கொண்டிருக்கிறேன். "சோலைமலை இளவரசியும்", " கள்வனின் காதலியும் " நினைவை விட்டு நீங்க மறுகின்றன ...
"பார்த்திபனின் கனவு" நினைவாகியதில் மகிழ்ச்சி ... சோழர்களையும் , பல்லவர்களையும் மனதில் நிறுத்தியவர் ,, மகா எழுப்பித்தன்
விக்ரமன் , வரலாற்றில் காதலை கனகச்சிதமாய் கூறியவர் , இவருடைய எழுத்துக்கள் யாவும் எண்ணத்தில்!!
சாண்டில்யன் !!!, எழுத்துலகின் சாஹஸக்காரர் , என்ன ஒரு அழகே உருவான எழுத்துக்கள் , ஜலமோகினியை இந்த ஜென்மத்துக்கும் மறக்கவியலாது ....
நா , பார்த்தசாரதி !!!!!!, காதல் என்ற வார்த்தை காதை எட்டினாலே காத தூரம் ஓடியவளை , காதலின் புனிதம் அறிய செய்தவர்,
அப்படி என்ன இருக்கு இந்த புத்தகத்தில் என்று பலரும் என்னிடம் கேட்டுவிட்டார்கள். ஆனாலும் , என்னை பொறுத்தவரை காதல் காவியம் என்றால் "குறிஞ்சி மலர்" தான் என்பேன், கதையின் முடிவு பிடிக்காமல் , கதாசிரியரை திட்டவேண்டமென்று அவரை தேடியபொழுதான் தெரிந்தது அவர் இல்லை என்று. குறிஞ்சி மலரை மறுபடியும் படிக்க மறுக்கிறேன் , மனம் தாங்காது..இவரின் நூல்கள் அனைத்தும் மனப்பாடமாகி போகின,,,,,,
சேத்தன் பகத் , இவரின் அணைத்து நாவல்களும் அத்துப்படி , எப்பப்பா !!!!எப்படி !!! இவரால் இப்படி காதலிக்க முடிந்தது என்பது என்னை பொறுத்தவரை ஆச்சரியமே !!!
ராபின் சர்மா ,,,, வாழ்வை ரக்ஷிக்க சொல்லிக்கொடுத்த ரசனை மிகுந்த எழுத்தாளன்....
இரமணிச்சந்திரனையும் ,,,, இரசிக்க கற்றுக்கொடுத்த பெருமை என் சுண்டு சகோதரிக்கே செல்லும் ....
ஹிட்லர் ,,, ஹிட் அடித்தவர் என் புத்தக வரிசையில் ..
என் வீட்டு அலமாரியில் உள்ள பாரதியையும் , பாரதிதாசனையும் , பத்திரமாய் பார்த்துகொள்ள்கிறேன் ....
கண்ணனாதாசனையும் கண்ணுக்குள் காண ஆசைதான்.....
லியோ டால்ஸ்டாய் யை ,, மீண்டும் கையில் ஏந்திகொள்ள ஏக்கம்தான் ....
பாலகுமாரன் படித்தாகிவிட்டது பட்டியலில் சேர்த்துக்கொள்வோம் ..
பாலகுமாரன் படித்தாகிவிட்டது பட்டியலில் சேர்த்துக்கொள்வோம் ..
ஆமீஸும் ,, அலமாரியை அலங்கரித்துவிட்டார் ,,,,,
சாருநிவேதிதாவும், இந்திரா பார்த்தசாரதியும் , இன்னும் பல எண்ணிலடங்கா எழுத்தாளர்களையும் வரிசையில் நிற்கவைத்துள்ளேன் ????????
ஒரு வரலாற்று கதை படித்தால் , அதில் வரும் அரசனாகவோ , அரசியாகவோ , கண்டிப்பாக என்னை பவித்துக்கொள்ள மாட்டேன் ..
அவர்களால் அனைத்தையும் கருத்தில் கொள்ள முடியாது அதனால் , நான் வேடிக்கை பார்ப்பனாகவே இருந்து விட்டு போகிறேன்.
படித்தவைகளை வவிரல்விட்டு எண்ணமுடியாதபடி இருக்கவேண்டும் என்ற ஆசை இம்மியளவும் குறையவில்லை ..
கணக்கிலடங்காத கதைகள் கைபேசியில் ஒளிந்துள்ளன ....
அலுவலகமும் ,, தேர்வுகளும் என்னை ஆக்கிரமித்துக்கொண்டதால் , இவர்கள் ஆழ்மனதில் அமைதியாக அமர்ந்து கொண்டார்கள்
எண்ணிலடங்கா எழுத்தாளர்களை எண்ணத்தில் கொள்ள வேண்டும் , தணியாமல் இருக்கட்டும் இந்த தெவிட்டா காதல்
தளிர்

என்ன ஒரு அழகிய சொல்லாடல் ஒவ்வொரு எழுத்தாளனையும் தனக்கே உரிய பாணியில் செதுக்கியுள்ளது அருமை வாழ்த்துக்கள் 💐💐💐
பதிலளிநீக்குவாழக்கற்றுக் குடுக்கும். .வாழ்க்கையை...
பதிலளிநீக்குசிறப்பு வாழ்த்துக்கள் சகோ..
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்கு))
பதிலளிநீக்கு